ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை

சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஸ்ரீ அம்பாங்கான் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக  செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் 'சீர்மிகு மாந்தர் உருவாக்க முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். அந்த முகாமில் பங்கு கொண்ட மாணவர்களிடையே, அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வண்ணம், தன்முனைப்புத் தூண்டல் உரையொன்றையும் வேதமூர்த்தி நிகழ்த்தினார். (படங்கள்: நன்றி - பி.வேதமூர்த்தி முகநூல் பக்கம்)

சிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - கடந்த வாரம் சிங்கப்பூரில் 3 நாட்களுக்கு நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததோடு, அடுத்த மாநாட்டை 2020-இல் மொரிஷியஸ் நாட்டில் நடத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் மலேசியப் பேராளர்களும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

அன்வாருக்கு ஆதரவு – மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

கோலாலம்பூர் - போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முடிவு குறித்து தான் அங்கீகரிப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார். "போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது அன்வாரின் தனி உரிமை. அதில் நான் தலையிட முடியாது. இது குறித்து கருத்துரைக்கவும் முடியாது. இருப்பினும் அவரது வேட்பு மனுவை நான் அங்கீகரிப்பேன்" என்றும் மகாதீர் கூறினார். "ஹாங்காங்கில் இருந்து அன்வார் என்னைத் தொலைபேசியில் அழைத்து போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் முடிவு குறித்து தெரிவித்தார். பொதுவாக இடைத் தேர்தல் எதற்கும் நான் பிரச்சாரத்துக்கு செல்வதில்லை என்பதை அவரிடம் நான்...

“2.0” முன்னோட்டம் – 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள்

சென்னை - ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய்குமார் கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த முன்னோட்டம் வெளியிடப்பட்ட உடனேயே இதுவரையில் யூடியூப் தளத்தில் மொத்தம் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. 500 கோடி ரூபாய் செலவில் 2.0 உருவாகி வருகிறது. இதுவரை வெளியான இந்தியப் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற...

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

சென்னை - மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் பொறுப்பாளர்கள் சிலரை மாற்றி வருகிறார். அதன் தொடர்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு (படம்) திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் துரை முருகன் இருந்து வந்தார். அவர் கட்சியின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து காலியாக இருக்கும் அந்தப் பொறுப்புக்கு தற்போது டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டிருக்கிறார். நியமனம் அறிவிப்பு வெளியானதும் டி.ஆர்.பாலு கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். தனது புதிய பதவி நியமனத்திற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட...

Anwar assures Azizah steps down as DPM when he is PM

JOHOR BAHRU – PKR de facto leader Datuk Seri Anwar Ibrahim today gave the assurance that PKR president Datuk Seri Dr Wan Azizah Wan Ismail would step down as Deputy Prime Minister after his appointment as Prime Minister. He said until then Dr Wan Azizah would not relinquish her post in the cabinet. “Why didn’t Wan Azizah step down” If she did, PKR will lose the Deputy Prime...

“எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் - "பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது அம்மாநிலத்திற்குக் கிடைத்த அதிர்ஷ்டமும் பெருமையும் ஆகும்" என பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்) விடுத்திருக்கும் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். "பக்காத்தான் ஹராப்பானின் 113 தொகுதிகளில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தன் வசம்...

Late Accapan seldom talked about his ailment – Son

PUCHONG -- Famous actor and comedian of the 80’s era, Accapan or his real name R. Samynathan who died of kidney failure this morning, was only known by his family members three months ago. His eldest son, S. Vikneshwaran, 31, said his late father seldom talked about his ailment with his family. “When father was referred to Hospital Putrajaya a month ago, his ailment had already...

கலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் காலமான பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்: 12-A, JALAN PU 3/2A, TAMAN PUCHONG UTAMA, 47140 PUCHONG, SELANGOR சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன், குறிப்பாக மலாய் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்து மலாய் சமூகத்திலும் நிறைய இரசிகர்களைப் பெற்றிருந்தார். 63 வயதான...

9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த “2.0” முன்னோட்டம்

சென்னை - நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஷங்கர்-ரஜினி கூட்டணியின் "2.0" திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் இதுவரையில் யூடியூப் தளத்தில் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. அந்த முன்னோட்டத்தின்படி விஞ்ஞான ரீதியான அச்சுறுத்தல் ஒன்று ஏற்படும் நிலையில் விஞ்ஞானி ரஜினி, அதனை முறியடிக்க சிட்டி என்ற செயற்கை மனிதனை (ரோபோ) மீண்டும் கொண்டு வரவேண்டும் என ஆலோசனை கூறுகிறார். சிட்டிக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து அவர் நடத்தும் அட்டகாசங்கள்...