RM 2.973 billion deposited into Najib’s personal account
KUALA LUMPUR – Investigations into the 1Malaysia Development Berhad (1MDB) case has uncovered that RM2.973 billion was deposited into the personal account of former Prime Minister Datuk Seri Najib Tun Razak, said Deputy Inspector-General of Police Tan Sri Noor Rashid Ibrahim (pic). He said the amount was deposited into an AmIslamic Bank account in three phases involving three companies, namely...
கலைஞர் அச்சப்பன் காலமானார்
கோலாலம்பூர் - பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பன் இன்று வெள்ளிக்கிழமை காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன், குறிப்பாக மலாய் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்து மலாய் சமூகத்திலும் நிறைய இரசிகர்களைப் பெற்றிருந்தார். மலாய் மொழியை அவர் உச்சரிக்கும் விதமும், இந்தியர்களைப் போல் நகைச்சுவையாகப் பேசும் விதமும் இரசிகர்களைக் கவர்ந்து அவரை புகழ்பெற்ற - மலேசியா முழுவதும் நன்கு அறியப்பட்ட கலைஞராக உயர்த்தியது. அஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளியேறி வரும் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கடந்த...
சென்னையில் உலகத் தமிழர் திருநாள் விழா – மலேசியர்களுக்கு அழைப்பு
சென்னை - 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல்-வணிகப் பரிமாற்றம் (பிஸினஸ் டூ பிஸினஸ்) தமிழ்நாட்டின் சென்னையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை கலாச்சாரம், இசைத்திருவிழா, ஆடைத் திருவிழா, வணிக சந்திப்புகள் போன்ற அங்கங்கள் இடம் பெற உள்ளன. அவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள் தமிழரின் வரலாறுகளை ஆவணப்படுத்தும் விதமாக விழா மலரும் இணைய மலரும் வெளியீடு காண உள்ளன. மேலும் உலகத் தமிழர்கள்...
MIC will not contest Port Dickson seat
KUALA LUMPUR -- MIC has confirmed that it will not contest the Port Dickson parliamentary by-election. Its president, Tan Sri S. A Vigneswaran, said the decision was made following several media statements made by UMNO leaders proposing for UMNO to field its candidate at the soon-to-be-held by-election despite the fact that MIC had held the seat, formerly known as Telok Kemang, for four...
கிம் கர்டாஷியனுக்கு பெராரி கார் வாங்கித் தந்த ஜோ லோ!
லாஸ் ஏஞ்சல்ஸ் – தனது கவர்ச்சியால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டாஷியன். “கர்டாஷியன்ஸ்” என்ற பெயரில் அவரது குடும்ப சம்பவங்களைக் காட்டும் தொலைக்காட்சித் தொடரும் உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில் கிம் கர்டாஷியனுக்கு தலைமறைவாகியிருக்கும் வணிகர் ஜோ லோ ஒரு வெள்ளை நிற பெராரி (Ferrari) காரை அன்பளிப்பாக வழங்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2011-இல் கிம் கர்டாஷியன் கிரிஸ் ஹம்ப்ரிஸ் என்பவரைத் திருமணம் செய்தபோது ஜோ லோ அந்தக் காரை திருமணப்...
ஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் (படம்) தலைமை வகிக்கிறார். 1எம்டிபி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அரசாங்க வழக்கறிஞராக வழக்காட, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த, முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த வழக்குகளைக் கையாள முன்வந்திருக்கும் கோபால் ஸ்ரீராம் நாட்டுக்கான சேவை அடிப்படையில்தான் வழக்காடவிருக்கிறார் என்றும் அவர் இந்த...
போர்ட்டிக்சனில் மஇகா போட்டியிடவில்லை
கோலாலம்பூர் - அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே மஇகா போர்ட்டிக்சன் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடாது என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அம்னோ போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதே வேளையில் தற்போது தங்களுக்கிடையில் முகிழ்த்துள்ள அரசியல் நல்லிணக்கத்திற்கு ஏற்ப, அம்னோ போர்ட்டிக்சனில் போட்டியிட வழிவிட்டு பாஸ் கட்சி ஒதுங்கிக் கொள்ளும் என அந்தக் கட்சியும் அறிவித்து விட்டது. சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அன்வார் இப்ராகிமுக்கும், அம்னோ வேட்பாளருக்கும் இடையிலான போட்டியாகத்...
அதிகாலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷாபி அப்துல்லா!
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அதிகாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னரே நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார் என ஊடகங்கள் தெரிவித்தன. அவர் மீது இன்று 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார். பின்னர் அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணையை (ஜாமீன்) நீதிமன்றம் வழங்கியது.
ஷாபி அப்துல்லா மீது 4 குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞருமான டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா மீது அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் கோர்ட்) 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளும், தவறான தகவல்களைத் தந்ததற்காக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்தார். சட்டவிரோதமான நடவடிக்கைக்காக 9.5 மில்லியன் ரிங்கிட் தொகையை இரண்டு தவணைகளில் அவர் பெற்றதாக முதல் இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. முன்னாள்...
ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். (மேலும் விவரங்கள் தொடரும்)