Home நாடு பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி!

பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி!

869
0
SHARE
Ad

palanivel_787566198புத்ரா ஜெயா, ஜூலை 13 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) செய்துள்ள மேல்முறையீட்டின் விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின் முடிவில், பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சங்கப் பதிவகத்தின் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக அமர்ஜிட் சிங்கும், பழனிவேல் தரப்பினரைப் பிரதிநிதித்து, முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ரகுநாத் கேசவனும், மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள 2009 மத்திய செயலவையின் சார்பில் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராமும் இன்று வழக்காடினர்.