Home நாடு எம்ஜிஆர் அஞ்சல் தலை பிரதமரிடம் சேர்ந்தது!

எம்ஜிஆர் அஞ்சல் தலை பிரதமரிடம் சேர்ந்தது!

1183
0
SHARE
Ad

MGRstamptoNajibகோலாலம்பூர் – ‘புரட்சித் தலைவர்’, ‘பொன்மனச் செம்மல்’ டாக்டர் எம்ஜிஆர் உருவம் பதிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் பிறந்து நூறு ஆண்டுகள் பூர்த்தியாகியிருப்பதை முன்னிட்டு, மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் இச்சிறப்பு அஞ்சல் தலையை தயாரித்து வெளியீடு செய்தார்.

இவர் தலைமையிலான தொண்டார்வலர் குழு ஒன்று, செப்டம்பர் 10-ம் தேதியன்று மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் அரங்கில்  எம்ஜிஆர் அனைத்துலக மாநாட்டையும் நூற்றாண்டு விழாவையும் ஒரு சேர வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

#TamilSchoolmychoice

MGRstampமஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையேற்று தொடக்கி வைத்த இவ்விழாவுக்கு, தமிழகத்தின் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் – விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் விஜிபி சந்தோசம் உட்பட அவர் தலைமையிலான 20 பேராளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழா தொடர்பான அனைத்து விவரங்களும் பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்க வைக்க வந்திருந்த பிரதமரை நேரடியாகச் சந்தித்த எஸ்.பி.மணிவாசகம், எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலையை அவரிடம் வழங்கி பாராட்டையும் பெற்றார்.