Home நாடு தேசிய முன்னணியின் நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க பிகேஆர் முடிவு!

தேசிய முன்னணியின் நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க பிகேஆர் முடிவு!

612
0
SHARE
Ad

wan-azizahகோலாலம்பூர், ஜூலை 16 – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் அடைத்ததை எதிர்க்கும் வகையில், தேசிய முன்னணியின் அனைத்து நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க பிகேஆர் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்வார் இப்ராகிம் மீது குற்றம் நிரூபித்து, அவரை சிறைக்கு அனுப்பியதற்கு எதிராக, மத்திய மற்றும் மாநில அளவில் தேசிய முன்னணி ஏற்பாடு செய்யும் அனைத்து நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளையும் பிகேஆர் புறக்கணிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பிதழைக் கண்டு மிகவும் ஆத்திரமடைந்த அன்வாரின் ஆதரவாளர்கள், நஜிப்பின் தந்திரம் என்றும், அம்னோ மீதான மக்களின் கோபத்தைக் குறைக்கவே இது போன்ற விசமத்தனங்கள் செய்யப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, அது குறித்து அறிக்கை விடுத்த பிரதமர் துறை அலுவலகம், எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு அனுப்பிய அழைப்பிதழில் தவறுதலாக அன்வாரின் பெயரையும் குறிப்பிட்டு விட்டதாக விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.