Home நாடு கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் கிட்டத்தட்ட போயிங் 777 -ஐ ஒத்து இருக்கிறது – போக்குவரத்து அமைச்சு

கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் கிட்டத்தட்ட போயிங் 777 -ஐ ஒத்து இருக்கிறது – போக்குவரத்து அமைச்சு

676
0
SHARE
Ad

Datuk Abdul Aziz Kaprawi APகோலாலம்பூர், ஜூலை 30 – ரியூனியன் தீவு அருகே நேற்று கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம், கிட்டத்தட்ட போயிங் 777 வகை தான் என துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

“கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி போயிங் 777 வகையுடன் ஒத்துப் போகிறது” என்று அப்து அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

எனினும், அது எம்எச்370 விமானத்தின் சிதைந்த பாகம் தானா என்பதை போக்குவரத்து அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

போக்குவரத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த சிதைந்த பாகம் எம்எச்370 -தின் பாகம் தான் என்பதற்கு தக்க ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது அந்த சிதைந்த பாகத்தை ஆய்வு செய்ய மலேசிய அதிகாரிகள் ரியூனியன் தீவிற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.