இலண்டன் – (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) இங்குள்ள பார்சன்ஸ் இரயில் நிலையத்தில் இரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து இலண்டன் முழுமையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் வருமாறு:
- இரயில் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டதில் 22 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.
இலண்டன் காவல் துறையின் சார்பில் பார்சன்ஸ் குண்டுவெடிப்பு குறித்து விளக்கமளிக்கும் காவல் துறை அதிகாரி
- வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தப்பட்ட, நேர இயக்கு கருவி பொருத்தப்பட்ட சாதனைம் ஒன்றையும் இலண்டன் காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
- இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவனைக் கண்டுபிடிக்கும் பணியில் இலண்டன் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
- பார்சன்ஸ் தாக்குதல் குறித்து இலண்டன் மாநகரத் தலைவர் (மேயர்) சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் இலண்டன் இதுபோன்ற தாக்குதல்களால் பயந்து விடாது, தோல்வியடையாது என வலியுறுத்தியுள்ளார்.
பார்சன்ஸ் இரயில் நிலைய நுழைவாயிலில் அணிவகுத்து நிற்கும் காவல் துறை, தீயணைப்புத் துறை வாகனங்கள். சம்பவம் நடந்த மூன்று நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்ததாகவும் இலண்டன் தீயணைப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.