Home உலகம் பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : மரண எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : மரண எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

940
0
SHARE
Ad

மணிலா : பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 93 பயணிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

நேற்று 40 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது, மரண எண்ணிக்கை 17 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டது. எனினும் உயிருடன் மீட்கப்பட்டவர்களில் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால், மரண எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

மரணமடைந்த 50 பேர்களில் 47 பேர் இராணுவ வீரர்களாவர். 3 பேர் இராணுவத்தினர் அல்லாத பொதுமக்களாவர்.

#TamilSchoolmychoice

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியான சூலு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்தப் பகுதியில் அபு சாயாப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல்களுடன் ஆயுதப் போரில் பிலிப்பைன்ஸ் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

C-130H இரகத்திலான அந்த விமானம் தரையிறங்கும்போது, விமான ஓடுபாதையை அடையாளம் காண முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஜோலோ விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

விமானம் மீது பயங்கரவாதத் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 53 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 49 பேர் இராணுவ வீரர்கள். எஞ்சிய நால்வர் இராணுவத்தினர் அல்லாத பொதுமக்களாவர்.

விமானம் விழுந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.