ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தனக்குப் பதிலாக ஓர் இளைஞர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து புதிய மந்திரி பெசார் ஒருவர் நியமிக்கப்படலாம் என்னும் ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை ஜோகூரின் மந்திரி பெசாராக ஹாஸ்னி முகமட் மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட வேளையில் அந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி ஜோகூர் சுல்தானைச் சந்தித்து புதிய மந்திரி பெசார் நியமனம் குறித்து விவாதித்தார்.