Home நாடு கைரி ஜமாலுடின் அம்னோ தலைமைத்துவத்தால் புறக்கணிப்பு

கைரி ஜமாலுடின் அம்னோ தலைமைத்துவத்தால் புறக்கணிப்பு

630
0
SHARE
Ad
சுங்கை பூலோ வட்டாரத்தில் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடும் கைரி

கோலாலம்பூர் : கைரி ஜமாலுடின் சுங்கை பூலோவில் போட்டி போடுவதாக அறிவித்தது முதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. “நான் அம்னோவின் தலைவராகப் போட்டியிட்டுத் தேர்வு பெறுவேன். பிரதமராக இந்த நாட்டை வழி நடத்துவேன்” என கைரி அறிவித்தது அம்னோவிலும் அரசியல் வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எனக்கு அம்னோ தலைமைத்துவம் எங்கு போட்டியிடுவது என எந்தவித அறிகுறியையும் காட்டாததால்தான் வேறு வழியின்றி, போட்டியிட சுங்கை பூலோவைத் தேர்ந்தெடுத்தேன். அதற்காக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனைச் சந்தித்தேன். அவரின் ஒப்புதலோடுதான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என கைரி கூறியிருக்கிறார்.

முன்னதாக, கைரி சுங்கை பூலோவில் போட்டியிடக் கேட்டுக் கொண்டதாகவும் அதனால்தான் அவருக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் கைரி இந்தத் தகவலை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இதன் மூலம் சாஹிட் கூறுவது உண்மையல்ல என்றும், கைரிக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் அம்னோ தலைமைத்துவம் புறக்கணித்தது என்பதும் தெளிவாகியிருக்கிறது.