Home நாடு பாஸ் கட்சியில் இணையப் போகும் அம்னோ தலைவர்கள் யார்?

பாஸ் கட்சியில் இணையப் போகும் அம்னோ தலைவர்கள் யார்?

529
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், அம்னோவிலிருந்து கணிசமான அளவில் முக்கியத் தலைவர்கள் விலகி பெர்சாத்து அல்லது பாஸ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அம்னோவில் இருந்து விலக்கப்பட்டு விட்ட கைரி ஜமாலுடின், டான்ஸ்ரீ நோ ஓமார் ஆகியோர் பெர்சாத்துவில் இணைவார்களா அல்லது பாஸ் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுப்பப்பட்டு வருகின்றன.

அம்னோவில் இருந்து விலக்கப்பட்ட அனுவார் மூசா பாஸ் கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோவிலிருந்து இணையப் போகும் மற்ற தலைவர்கள் யார் என்பதை ஜூன் மாதம் தொடக்கத்தில் அறிவிப்போம் என பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாம்சுரி மொக்தான் தெரிவித்திருக்கிறார்.