Home நாடு வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்

வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்

1688
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனுமான டத்தோஸ்ரீ வேள்பாரி இரண்டாம் தவணைக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 25) பதவியேற்றுக் கொண்டார்.

மேலவையின் தலைவர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

அவரின் பதவிக் காலம் 2 செப்டம்பர் 2023 தொடங்கி 1 செப்டம்பர் 2026 வரை 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும். மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமட் ஷாவால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே 2 செப்டம்பர் 2020 முதல் 3 ஆண்டுகளுக்கு அவர் செனட்டராக பதவி வகித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற மேலவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 12-வது மலேசியத் திட்டத்தின் மறு ஆய்வை பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று மேலவையில் சமர்ப்பித்தார்.