கோலாலம்பூர் : பிரதமராகப் பதவியேற்றதும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணி முதல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் உரையாற்றி வருகிறார்.
முதல் கட்டமாக 393.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டை 2024 வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கும் என அன்வார் அறிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி – 42.3 விழுக்காடு நிதி, கல்வி, சுகாதாரம் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் தன் உரையின் தொடக்கத்தில் அன்வார் தெரிவித்தார்.