Home நாடு அமைச்சரவை மாற்றம் ஆண்டு இறுதிக்குள் … – அன்வார் அறிவிப்பு

அமைச்சரவை மாற்றம் ஆண்டு இறுதிக்குள் … – அன்வார் அறிவிப்பு

418
0
SHARE
Ad
இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) புத்ரா ஜெயா பள்ளி வாசலில் தொழுகையின்போது அன்வார்…

கோலாலம்பூர் : அடுத்த அமைச்சரவை மாற்றம் எப்போது என தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோடி காட்டியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு பள்ளி வாசலில் தொழுகையில் கலந்து கொண்டபின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்வார் இந்த விவரங்களை வெளியிட்டார.

உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவினம் அமைச்சர் பதவி இன்னும் காலியாக இருக்கும் நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என ஆரூடங்கள் நிலவி வருகின்றன.