சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பாஜக கூட்டணி சார்பில் பாஜகவே இங்கு போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரிக்கான துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார். மக்கள் பணிக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ள அவர் தனது பதவி விலகல் அதிபரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், தான் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் பணி என்ன என்பது குறித்து அறிவிக்கப் போவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
அவர் அநேகமாக புதுச்சேரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழிசை சார்ந்த சமூக வாக்குகள் அதிகமுள்ள தென் மாவட்ட தொகுதிகளில் ஒன்றிலும் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.