Home நாடு துணைத் தலைவருக்காகச் சரவணன்-விக்னேஸ்வரன் மோதலா?

துணைத் தலைவருக்காகச் சரவணன்-விக்னேஸ்வரன் மோதலா?

660
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 3 – நேற்று ஒரு தமிழ் நாளிதழில் மஇகாவின்  நடப்பு உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணனும், மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் விரைவில் நடைபெறவிருக்கும்  தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலில் மோதப் போகின்றார்கள் என்றும் அதற்கு முன்னோட்டமாக அவர்கள் இருவருக்கும் இடையிலான அரசியல் முட்டல் மோதல்கள் தொடங்கி விட்டன என்றும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Saravanan-Vigneswaran-full photo

“எங்களுக்குள் மோதலா?”

#TamilSchoolmychoice

அந்தச் செய்தியோடு விக்னேஸ்வரன், சரவணனின் கழுத்தை நெறிப்பது போல் நகைச்சுவைக்காக ஒரு கேலிச் சித்திரமும் (கார்ட்டூன்) வெளியிடப்பட்டிருந்தது.

நேற்று மஇகா தலைமையகத்திற்கு வந்த சரவணன், கையோடு  அந்தத் தமிழ் நாளிதழின் பிரதியோடு வந்தார். அப்போது மஇகா தலைமையகத்தில் பணியில் இருந்த விக்னேஸ்வரனும், அந்தக் கேலிச் சித்திரத்தில் வரைந்திருந்தது போலவே, சரவணனைக் கட்டிப் பிடிக்க, அப்போது எடுக்கப்பட்ட இந்தப் படம் பின்னர் நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Saravanan-Vigneswaran-Cartoon-Photo-Combo