Home நாடு சரவாக் நடைப்பேரணியை ரத்து செய்க – ஐஜிபி அறிவுறுத்து

சரவாக் நடைப்பேரணியை ரத்து செய்க – ஐஜிபி அறிவுறுத்து

563
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர், ஜூலை 22 – சரவாக் மாநிலம், கூச்சிங்கில் நடைபெறுவதாக உள்ள நடைப் பேரணியை ரத்து செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளர்களை தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வலியுறுத்தி உள்ளார்.

இத்தகைய நிகழ்வுகளை சரவாக் பிரிவினையை வலியுறுத்தும் சிலர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“சரவாக், சரவாக் மக்களுக்கே – சரவாக் சுதந்திர மற்றும் சுயாதீன நடை’ (Sarawak For Sarawakians (S4S) – #722 Sarawak Freedom and Independent Walk) என்ற பெயரில் நடைபெற உள்ள நடைப்பேரணி நிகழ்வை, சரவாக் பிரிவினையைக் கோரும் சிலர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.இந்த நிகழ்வை தங்களுக்கான தளமாகப் பயன்படுத்தி அவர்கள் பிரிவினையைத் தூண்டக்கூடும்.”

#TamilSchoolmychoice

“இத்தகைய செயல்கள் அனைத்தும் கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே சட்டம் ஒழுங்கை கட்டிக் காக்கவும், மலேசிய இறையாண்மையை நிலைநிறுத்தவும், இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயங்காது.”

“எனவே ஜூலை 22ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணியை ரத்து செய்யுமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்,” என அறிக்கை ஒன்றில் காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.