Home இந்தியா எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம்  

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம்  

525
0
SHARE
Ad

6132290405_a5c8b74f3c_bபுதுடெல்லி ,ஜூலை 23- லலித் மோடிக்கு பாஜக-வினர் உதவியது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழலில் ஈடுபட்டது முதலான பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்,மக்களவையும் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதற்கொண்டு, காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தங்களது சட்டையில் கருப்புத் துணியைக் குத்தி வந்து,தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் இத்தகைய செயல்பாட்டால் கடந்த 2 நாட்களில்  ஏறக்குறைய ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice