Home தமிழ் நாடு நாங்களே தான் வரணுமா..நீங்க வாங்களேன் – கருணாநிதிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்!

நாங்களே தான் வரணுமா..நீங்க வாங்களேன் – கருணாநிதிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயகாந்த்!

597
0
SHARE
Ad

Vijayakanth_1251813fசென்னை – அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பலமான கூட்டணி அமைய வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ள திமுக, பல்வேறு வழிகளில் தேமுதிக, காங்கிரஸ், பாஜக என முக்கிய கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி, மற்ற கட்சிகளுக்கு பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் தனது ஆசையை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கருணாநிதிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தேமுதிக தலைவர் திமுகவிற்கும் எதிராக பலமான விமர்சனங்களை வைத்து வருகிறார். சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விஜயகாந்த், “தேமுதிகவும், 500256015karunanithi111_28மதிமுகவும் நம்ம கூட்டணிக்கு வந்து விடும் என்று கருணாநிதி கூறி வருகிறார். இது கனவுதான்… ஏன் நாங்கதான் உங்க பின்னாடி வரணுமா? நீங்க வரக்கூடாதா? உங்க பின்னாடி வந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. அது அந்தக்காலம். இப்போ நீங்கதான் இறங்கி வரணும்” என்று பேசியுள்ளார்.

மேலும் அவர், “திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்” என்றும் கூறியுள்ளதன் மூலம், திமுகவின் கூட்டணி கனவு கலைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.