Home நாடு பிரிக்பீல்ட்சில் பார்வையற்றோருக்காக விழிப்புணர்வு நடைப் பயணம்!

பிரிக்பீல்ட்சில் பார்வையற்றோருக்காக விழிப்புணர்வு நடைப் பயணம்!

764
0
SHARE
Ad

White-Cane-Safety-Dayகோலாலம்பூர் – பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருப்பது ஒரு குறையே இல்லை என்பதை உணர்ந்த எத்தனையோ பேர், தங்களது குறைகளைப் பொருட்படுத்தாமல் உலக அளவில் பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். தொடர்ந்து சாதனைகள் படைத்தும் வருகின்றனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ‘வைட் கேன் சேஃப்டி டே – White cane safety day’ கொண்டாடப்பட்டு வருகின்றது.

பார்வையற்றோர் பயன்படுத்தும் வெள்ளைக் கைத்தடியைக் குறிப்பது தான் ‘வைட் கேன்’.

#TamilSchoolmychoice

அந்த வகையில், மலேசியாவில் 2017-ம் ஆண்டிற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக ‘இன்னர் வீல்ஸ் கிளப் ஆஃப் சிலாங்கூர்’ அமைப்பும், மலேசியப் பார்வையற்றோர் சங்கமும் இணைந்து நாளை அக்டோபர் 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு தலைநகர் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள எம்ஏபி காம்பிளக்ஸ் முன்னே, ‘வைட் கேன் சேஃப்டி வால்க் – White cane safety walk’ என்ற நடை பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

இதில் பங்கேற்ப்பதாக இருந்தால் தலா 60 ரிங்கிட், இதில் பங்கேற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு நிதியுதவி செய்வதாக இருந்தால் தலா 100 ரிங்கிட், வெள்ளைக் கைத்தடி ஒன்றை உபயமாக வழங்குவதாக இருந்தால் தலா 43 ரிங்கிட் அல்லது ஏதாவது முடிந்த நிதியுதவியைச் செய்யலாம்.

இது குறித்த மேல் விவரங்களுக்கு:

தலைவர் சாந்தா (+6012-2200643)

செயலாளர் ஜஸ்பிர் (+6012-3162957)

முன்னாள் தலைவர் டாக்டர் பாமா சிவசுப்ரமணியம் (012-2449742)

டத்தின் ஷாமினி (+6012-5688964) அல்லது jasbirsarjit@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.