Home உலகம் பிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்!

பிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்!

1103
0
SHARE
Ad

Harryலண்டன் – பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேக்ஹான் மார்க்ளேவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெறும் என ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.

33 வயதான ஹேரி, தற்போது பிரிட்டிஷ் அரியணையில் 5-வது இடத்தில் இருக்கிறார்.

#TamilSchoolmychoice

36 வயதான மார்க்ளே அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் என அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.