Home கலை உலகம் ஜேம்ஸ் பாண்டை இயக்குகிறார் ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ டேனி பாய்ல்?

ஜேம்ஸ் பாண்டை இயக்குகிறார் ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ டேனி பாய்ல்?

901
0
SHARE
Ad

007மார்ச் 27- அடுத்து வரும் ‘ஜேம்ஸ்பாண்ட் 007’  படத்தை, ஸ்லம்டாக் மில்லியனேர் தந்த டேனி பாய்ல் இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பாண்ட் படம் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு இறுதியில் டேனியல் கிரெய்க் நடித்த ‘ஸ்கைபால்’ வெளியானது.

இந்தப் படத்தை சாம் மென்டிஸ் இயக்கியிருந்தார். அடுத்த பாண்ட் படத்தையும் இவர்தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், அவர் அதிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனவே, ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை இயக்கிய டேனி பாய்லுக்கு இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைத் தர முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோகலி.

இந்த புதிய பாண்ட் படத்திலும் டேனியல் கிரெய்க்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.