Home நாடு நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!

நஜிப் ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பார்!

1415
0
SHARE
Ad
அமார் சிங்

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா எனக் காத்திருக்கும் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணம் முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள், கைக்கெடிகாரங்கள், ஆடம்பரக் கைப்பைகள் ஆகியவற்றின் மதிப்பை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் இன்று புதன்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின் அமார் சிங், கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த கைக்கெடிகாரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை நிபுணர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பேன் எனவும் அறிவித்திருந்தார்.

அந்த அதிரடி அறிவிப்பு இன்று அமார் சிங் நடத்தவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள் – கோப்புப் படம்
#TamilSchoolmychoice

காவல் துறைத் தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநரான அமார் சிங், 1எம்டிபி விவகாரங்களை விசாரிக்கும் பொருட்டு அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி பெட்டி, பெட்டியாக ரொக்கப் பணத்தையும், ஆடம்பரப் பொருட்களையும் கைப்பற்றியிருந்தார்.