Home நாடு அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நஜிப் கைது

அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நஜிப் கைது

1254
0
SHARE
Ad
நஜிப் துன் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக அனைத்து முனைகளிலும் மெல்ல, மெல்ல வலுவான வலைப் பின்னலோடு, வழக்குகள் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கணிக்கப்படுகிறது.

நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட பணம், ஆபரணங்கள், அவர் மீதான விசாரணைகள், அவரது மனைவி ரோஸ்மா மன்சோரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம், 1எம்டிபி தொடர்புடைய 400 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள், நஜிப்பின் உதவியாளர் கைது மூலம் பெறப்பட்டிருக்கும் வாக்குமூலம் – என அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்டு – நஜிப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடுத்த வாரம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை ஜூலை 2-ஆம் தேதி எஞ்சியிருக்கும் அமைச்சர்கள், துணையமைச்சர்களின் பதவிப் பிரமாணம் முடிவடைந்ததும், செவ்வாய்க்கிழமை முதல் அவர்கள் தங்களின் பணிகளில் அமர்ந்ததும், முழுவீச்சில் நஜிப் மீதான வழக்கு விசாரணைகள் முடுக்கி விடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.