Home நாடு நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?

நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?

1468
0
SHARE
Ad
செத்தி அக்தார் அசிஸ்

கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்த தகவல்கள் முன்னாள் பேங்க் நெகாரா வங்கியின் ஆளுநர் செத்தி அக்தார் அசிசுக்கு முன்னரே தெரியும் என்றும் ஆனால் அதுகுறித்து அவர் எதிர்ப்பு தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை என நஜிப் துன் ரசாக் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

“நான் பிரதமராக இருந்த காலத்தில் பேங்க் நெகாரா ஆளுநராக நீங்கள் சிறப்பான பணிகளை ஆற்றி வந்தீர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் அந்த காலகட்டத்தில் இந்த விவரங்கள் யாவும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது” நஜிப் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

நஜிப் கைது செய்யப்பட்டவுடன் ஜூலை 3-ஆம் தேதி ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் நஜிப் வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட செத்தி அக்தார் “இந்த சர்ச்சை வெடித்தவுடன் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஜூலை 3-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு நான் அழைக்கப்பட்டேன். அப்போது என்னிடம் பிரதமர், இந்த விவகாரத்தில் தான் தவறு எதுவும் செய்யவில்லை என அறிக்கை ஒன்றை விடுக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். ஆனால், அத்தகைய அறிக்கை எதனையும் என்னால் வழங்க முடியாது, காரணம் அந்த வங்கிக் கணக்கின் விவரங்கள், என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்றும் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

“பேங்க் நெகாரா அதிகாரிகளுக்கு நஜிப்புக்கு வந்த பணம் குறித்து ஐயப்பாடுகள் இருந்திருக்குமானால் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் தெரிவிக்காததால் இந்த விவகாரத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என நான் கருதினேன்” என்றும் செத்தி கூறியிருக்கிறார்.

சுமார் 16-ஆண்டு காலம் பேங்க் நெகாரா ஆளுநராக இருந்த செத்தி 2016-இல் தனது பதவியை விட்டு விலகினார்.

செத்தியின் அறிக்கைக்குப் பதில் தெரிவிக்கும் வகையில்தான் நஜிப் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.