
புத்ரா ஜெயா – நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி போட்டியிட சங்கப் பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளது.
நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை எதிர்த்துக் களத்தில் குதித்துள்ள ரபிசி ரம்லிக்கு சங்கப் பதிவிலாகாவின் இந்த முடிவு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.