Home உலகம் 200 ஆண்டுகள் பழமையான பிரேசில் அருங்காட்சியகம் தீயில் அழிந்தது

200 ஆண்டுகள் பழமையான பிரேசில் அருங்காட்சியகம் தீயில் அழிந்தது

941
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ – பிரேசில் நாட்டின் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிய அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 2) இரவு தீயில் முற்றாக அழிந்ததைத் தொடர்ந்து உலகம் எங்கும் அதிர்ச்சி அலைகள் எழுந்துள்ளன.

இதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுமார் 20 மில்லியன் அருங்காட்சிப் பொருட்கள் இந்தத் தீயினால் அழிந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில் அருங்காட்சியகம் தீயில் அழிந்ததை முன்னிட்டு பொதுமக்களில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இத்தனை முக்கியமான அருங்காட்சியகத்தில் தீ அபாயத்துக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.