Home Uncategorized தெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு

தெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு

907
0
SHARE
Ad

இலண்டன் – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய மாற்றுத் திட்டம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

பிரெக்சிட் திட்டத்திற்கான இறுதி நாளை எட்ட இன்னும் 17 நாட்களே இருக்கும் நிலையில் 149 வாக்குகள் பெரும்பான்மையில் தெரசா மேயின் திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்களில் தொடர்ந்து குழப்பமும் அடுத்தது என்ன என்ற கேள்விகளும் நிலவி வருகின்றன.