Home உலகம் நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆடவன் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆடவன் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!

819
0
SHARE
Ad

வெலிங்டன்: கடந்த மாதம் நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவனுக்கு 50 கொலை குற்றச்சாட்டுகளும், 39 கொலை முயற்சிக்கான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன என அனாடொலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை அந்த ஆடவன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவான் என அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மற்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் மேலும் இது குறித்த தகவல்களை வெளியிட முடியாது என காவல் துறைத் தெரிவித்ததாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஒரு மலேசிய இளைஞர் உட்பட, குறைந்தபட்சம் 50 பேர் அந்த கொடூரச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.