Home நாடு 270 மில்லியன் பறிமுதல் வழக்கில் மொகிதின், ஷாபி அப்டால் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்!- அம்னோ

270 மில்லியன் பறிமுதல் வழக்கில் மொகிதின், ஷாபி அப்டால் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்!- அம்னோ

722
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சாட்சியமளிக்க தற்போதைய அரசாங்கத் தலைவர்களான உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் சபா மாநில முதல்வர் ஷாபி அப்டால் அழைக்கப்படலாம் என்று அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபியிலிருந்து அம்னோ கட்சி நிதி பெற்றபோது, மொகிதின் யாசின் மற்றும் முகமட் ஷாபி அப்டால் ஆகியோர் அம்னோ மேலாண்மைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்ததாக அனுவார் தெரிவித்தார்.

அப்போது அக்குழுவின் தலைவராக மொகிதின் இருந்ததாகவும்,  ஷாபி அதன் உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததாகவும் அனுவார் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இவர்கள் இருவரும் முறையே அம்னோ துணைத் தலைவர் மற்றும் அம்னோ உதவித் தலைவர் பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நஜிப்பின் கணக்கிற்கும், பின்னர் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுமார் 270 மில்லியன் 1எம்டிபி பணம் மாற்றப்பட்டதை மீட்டெடுக்கபணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 56-இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆனையத் தலைவர் லத்தீஃபா கோயா கூறியிருந்தார்.