Home நாடு பிரதமர், லிம் கிட் சியாங் சந்திப்பு!

பிரதமர், லிம் கிட் சியாங் சந்திப்பு!

631
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் ஜசெக கட்சி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உடனான சந்திப்பு  இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் உள்ளடகத்தை வெளிப்படுத்த கிட் சியாங் மறுத்த நிலையில், இது தேசிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம் என முடித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

மலேசியா வெற்றிப்பெற்ற நாடாக உருமாறுவதற்கு நம்பிக்கைக் கூட்டணி எல்லா விதமான முயற்சிகளையும் செய்யும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாதாக, 1எம்டிபி ஊழலை மூட முயற்சித்த குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில வாரங்களாக லிம் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.