Home நாடு முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!

முடிந்தால் அஸ்மின் அலியை கைது செய்யுங்கள், ஐஜிபிக்கு பார்ஹாஷ் சவால்!

855
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளியோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை முடிந்தால் கைது செய்யுமாறு காவல் துறை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பார்ஹாஷ் வாபா சால்வடோர் சவால் விடுத்துள்ளார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக அரசியல் சதி இருப்பதாக அவர் நம்புவதாகக் கூறினார்.

அஸ்மின் ஏன் கைது செய்யப்படாமல், தம்மை காவல் துறை கைது செய்தது என்று அதிகாரிகளே குழப்பமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நான் அஸ்மினைப் போல் இல்லை.  எனவே காவல் துறையினர் ஏன் எனது வாக்குமூலத்தைப் பெற அழைத்தனர் என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால் என்னை ஒரு கொலைகாரன், கீழ்மட்ட கைதி போல நடத்தினார்கள். என் மீது கடுமையான நடவடிக்கையை சுமத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்.” என்று பார்ஹாஷ் கூறினார்.

அவர்கள் எனது தடுப்புக் காவலை மேலும் ஏழு நாட்கள் வைத்திருக்க முயன்றனர். ஆயினும்,எனது வழக்கறிஞர்களின் வாதத்தினால் நான் தப்பித்தேன்”என்று அவர் குறிப்பிட்டார்.