Home நாடு அஸ்மின் கூட்டத்திற்கு வராதது குறித்து பிகேஆர் அரசியல் பணியகம் முடிவு செய்யும்!

அஸ்மின் கூட்டத்திற்கு வராதது குறித்து பிகேஆர் அரசியல் பணியகம் முடிவு செய்யும்!

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்க அனைத்து பிகேஆர் தலைவர்களுக்கும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பிகேஆர் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

பிகேஆர் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதாந்திர மத்திய தலைமைக் குழு கூட்டத்தில் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இல்லாதது குறித்து செய்தியாளர் கேட்ட போது பாஹ்மி இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வார இறுதியில் போர்ட் டிக்சனில் பிகேஆர் தலைவர்களுக்கான ஒன்றுக்கூடல் நிகழ்ச்சியில் அஸ்மின் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், அஸ்மினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா என்ற முடிவினை பிகேஆர் அரசியல் பணியகத்திடம் ஒப்படைபதாக அவர் கூறினார்.

நேற்றைய சந்திப்புக் கூட்டத்தில் பிகேஆர் உதவித் தலைவர்களான சுரைடா கமாருடின் மற்றும் தியான் சுவா கலந்துக் கொள்ளவில்லை. மேலும், பிகேஆர் மகளிர் தலைவர் ஹானிசா தல்ஹா மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் இடம் பெறவில்லை.