Home நாடு இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல் துறை

இந்திரா காந்தி: காவல் துறை தேடலை இரட்டிப்பாக்கி உள்ளது, நல்லதொரு முடிவை எதிர்பார்க்கிறோம்!- காவல் துறை

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காணாமல் போன தனது மகள் பிரசானா தீட்சாவுடன் மீண்டும் இந்திரா காந்தியை ஒன்றிணைக்க காவல் துறை எல்லா விதமான நடவடிக்கைகளையும் இரட்டிப்பாக்கி வருவதாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தாம் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டதாகவும், அது நல்ல முறையில் முடிவடைந்து அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த வழக்கு மிகவும் வருத்தமான ஒன்று. மலேசியர்களின் இதயங்களை தொட்ட நிகழ்வாக இது உள்ளது . நாங்கள் ஒரு குழந்தையைப் பிரிந்த தாயைப் பற்றி பேசுகிறோம். காவல் துறையினரின் முயற்சிகளை இரட்டிப்பாக்க நான் உத்தரவிட்டுள்ளேன். காவல் துறையினர் தேடி வருகிறார்கள். ஆனால், என்னால் அதனை வெளியிட முடியாதுஎன்று ஹாமிட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிட்துவான் அப்துல்லா அப்போதைய 11 மாத பிரசானாவை கடத்தி, ஒருதலைப்பட்சமாக தம் மூன்று குழந்தைகளையும் இஸ்லாமிற்கு மாற்றினார்.

சமீபத்தில், இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட்) ரிட்துவான் வானுக்கு ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்கள் உதவுவதாக கூறியிருந்தது.