Home நாடு பெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்!

பெருநாள் துணிமணிகள், பலகாரங்கள் வழங்க மாவட்ட எல்லைகளை கடக்கின்றனர்!

859
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனுமதி கடிதங்கள் இல்லாமல் மாவட்டங்களையும் மாநிலங்களையும் கடக்க பெருநாள் துணிமணிகள் மற்றும் பலகாரங்களை வழங்குவதாகக் கூறி மக்கள் நியாயமற்ற சாக்குகளைப் பயன்படுத்துவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா காவல் துறைத் தலைவர் முகமட் பக்ருடின் அப்துல் ஹமீட், தனது துறை இதற்காக அபராதங்களை விதிக்கவில்லை என்றும், மாறாக சம்பந்தப்பட்ட நபர்களைத் திருப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார்.

“நாங்கள் நேற்று (மே 9) முதல் சாலைத் தடுப்புகளை தொடங்கினோம். இதுவரை பல சாலை பயனர்கள் முறையற்ற நோக்கங்களுடன் மாநிலத்தைக் கடக்க பிடிவாதமாக இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும் அவர்கள் திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

“ஷா ஆலாமில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு துணிகளை அனுப்புவது, பொருட்களை வாங்குவது, ஷா ஆலாமில் குடும்பங்களை கடைக்கு அழைத்து வருவது அவர்களின் காரணங்களில் ஒன்றாகும்,” என்று அவர் நேற்று இரவு பெர்னாமாவிடம் கூறினார்.

வேலை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, காவல் துறை கூடுதல் பாதைகளைத் திறக்கும், ஆனால், வழக்கம் போல் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் பிறப்பித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் முகமட் பக்ருடின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.