கோலாலம்பூர்: உலக வணிக மையமான கோலாலம்பூரில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெற இருந்த சுமார் 2,800 பெறுனர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின், மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இதற்கு பதிவு செய்தவர்களுக்கு இது பொருந்தும் என்றார்.
தினசரி கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தடுப்பூசி மையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக இது நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
“2,800 பதிவுகள் மே 17 முதல் 23 வரை பிற்பகுதியில் மாற்றப்படும். நாளை முதல் மைசெஜாதெரா விண்ணப்பத்தின் மூலம் அவர்களுக்கு அறிவிக்கப்படும்,” என்று அவர் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.