Home நாடு புதிய அமைச்சரவை : இந்திய சமுதாயத்திற்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புகள் இல்லை!

புதிய அமைச்சரவை : இந்திய சமுதாயத்திற்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புகள் இல்லை!

890
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவை இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரையில் ஏமாற்றமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

மொகிதின் யாசின் அமைச்சரவையில் இருந்தது போன்றே ஒரே ஒரு அமைச்சர் பொறுப்பு மட்டுமே இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியதுதான்.

இருந்தாலும் மஇகா சார்பில் துணையமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. குறிப்பாகக் கல்வி அமைச்சில் இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ஆனால் இந்தியர் வேறு யாரும் அமைச்சுப் பொறுப்புகளில் நியமிக்கப்படவில்லை. துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தாரா குமார் கூட சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு சந்தாரா குமார் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரையாவது கல்வி அமைச்சில் துணையமைச்சராக நியமித்திருந்தால் அதன் மூலம் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகள், கல்விப் பிரச்சனைகள் ஓரளவுக்கு அமைச்சு ரீதியாகத் தீர்க்கப்பட்டிருக்கும்.

எனவே, புதிய அமைச்சரவை இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.