Home நாடு அன்வார் ஞாயிறு பாராமல், தலைவர்களுடன் சந்திப்பு – மக்கள் பிரச்சனை தீர்க்க ஆலோசனைகள்

அன்வார் ஞாயிறு பாராமல், தலைவர்களுடன் சந்திப்பு – மக்கள் பிரச்சனை தீர்க்க ஆலோசனைகள்

433
0
SHARE
Ad
ஜோகூர் சுல்தானுடன் அன்வார் சந்திப்பு

புத்ரா ஜெயா : புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், அடுத்தடுத்து பல அரசியல் கட்சிகளைத் தலைவர்களைச் சந்தித்தார்.

சபா வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டாலுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அன்வாருக்கு ஷாபி தன் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து சபாவின் ஜிஆர்எஸ் கூட்டணித் தலைவரும் சபா முதலமைச்சருமான ஹாஜிஜி நூர் அன்வாரைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அன்வார் பொருட்களின் விலையேற்றத்தைக் குறைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தினார்.

எதிர்வரும் வாரத்தில் அன்வாரின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.