Home உலகம் ஜிம்பாப்வேயில் தேர்தல்: முகாபே மீண்டும் அதிபர் ஆவாரா? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜிம்பாப்வேயில் தேர்தல்: முகாபே மீண்டும் அதிபர் ஆவாரா? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

988
0
SHARE
Ad

ஹராரே, ஆக. 1– ஜிம்பாப்வேயில் நடந்த தேர்தலை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாராளுமன்றம் மற்றும் புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதில், தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே, பிரதர் மோர்சன் டிஸ்வான்கிராஸ் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர்.

zimbabwe-votes-in-third-mugabe-tsvangirai-showdown-1375310003-7389தேர்தலையொட்டி நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குபோட்டனர். ஹராரே நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் அதிபர் ராபர்ட் முகாபே வாக்கு  போட்டார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் வன்முறை மற்றும் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க ஆப்பிரிக்க யூனியனைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டனர். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது.

அதை தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து இன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் அனைத்தும் இன்னும் 5 நாட்களில் முழுமையாக வெளியாகிறது.

இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாருக்கும் 50 சத வீதம் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வருகிற செப்டம்பர் 11–ந்தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும்.

தற்போது அதிபர் பதவி வகிக்கும் ராபர்ட் முகாபேக்கு 89 வயது ஆகிறது. இங்கிலாந்திடம் இருந்து கடந்த 1980–ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 33 ஆண்டுகளாக இவர் தான் ஜிம்பாப்வேயின் அதிபராக பதவி வகித்து வருகிறார். தற்போது வெற்றி பெற்றால் மீண்டும் 5 ஆண்டுகள் அதிபராக பதவி வகிப்பார்.