Home கலை உலகம் ஆஸ்கார் விருது நடிகர் பிலிப் சேமோர் ஹாப்மேன் மரணம்!

ஆஸ்கார் விருது நடிகர் பிலிப் சேமோர் ஹாப்மேன் மரணம்!

762
0
SHARE
Ad

philip-seymour-hoffman-completes-detox-for-narcotic-abuseநியூயார்க், பிப் 03 – ஹாலிவுட்டைச் சேர்ந்த ஆஸ்கார் விருது நடிகர் பிலிப் சேமோர் ஹாப்மேன்(வயது 46) நியூயார்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அளவுக்கதிகமான போதை மருந்து தான் அவரது இறப்புக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பிரபல அமெரிக்க நடிகரும், 3 குழந்தைகளுக்கு தந்தையுமான அவர்,  நேற்று காலை மேன்ஹட்டான் அபார்ட்மெண்ட்டிலுள்ள அவரது வீட்டின் குளியல் அறையில் பிணமாகக் கிடந்தார்.

#TamilSchoolmychoice

அவரது இடது கையில் போதை ஊசி ஒன்று குத்தப்பட்டு இருக்க, அவரைச் சுற்றி ஹெராயின் போதை மருந்தின் இரண்டு காலி பைகள் கிடந்துள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு ‘கேப்போட்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஹாப்மேனுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.