புத்ராஜெயா, ஜூலை 26 – இன்று மலேசிய மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம், புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உக்ரேன் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட மாஸ் எம்எச் 17 விமானத்தில் பலியான பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவருடன் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய்யும் உடனிருந்தார்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி கிழக்கு உக்ரேனில் பிரிவினைப் போராளிகளால் மாஸ் எம்எச் 17 நிறுவனம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த சம்பவத்தில் 283 பயணிகளும் 15 விமான பணியாளர்களும் உயிரிழந்தனர்.