Home நாடு விமானத்திற்குள் சீரற்ற அழுத்தம் – தரை இறக்கப்பட்ட மாஸ் எம்எச் 70 விமானம்!

விமானத்திற்குள் சீரற்ற அழுத்தம் – தரை இறக்கப்பட்ட மாஸ் எம்எச் 70 விமானம்!

497
0
SHARE
Ad

MASகோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – கோலாலம்பூரில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு இன்று காலை புறப்பட்ட மாஸ் விமானம் எம்எச் 70-ல், சீரற்ற அழுத்தம் (pressure) நிலவியதால் மீண்டும் கோலாலம்பூரில் தரை இறக்கப்பட்டது.

எம்எச் 70 விமானம் வானில் பறக்கத் துவங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் , விமானத்தினுள் சீரற்ற அழுத்தம் நிலவியது. கடும் அவதிக்கு ஆளான பயணிகள் விமான ஊழியர்களிடம் தெரிவித்த பின்னரும், விமானத்தின் உள்ளே பராமரிக்கப்படவேண்டிய அழுத்தத்தினை சீராகப் பராமரிக்க முடியவில்லை.

இதனால் அந்த விமானம் மீண்டும் கோலாலம்பூர் திரும்பியது. அதன் பின் மற்றொரு விமானம் மூலம் பயணிகள் அனைவரும் டோக்கியோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

விமானத்தில் நிலவிய அழுத்தம் குறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனர் அசாருதின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “விமானத்திற்கு உள்ளே பயணிகளின் வசதிக்கேற்றபடி அழுத்தத்தினை பராமரிக்க முடியவில்லை. அதனால் விமானம் தரையிறக்கப்பட்டது. எனினும் இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை” என்று கூறியுள்ளார்.

இரு பெரும் பேரிடர்களுக்குப் பின் கடும் சிக்கலுக்கு உள்ளான மாஸ் விமான நிறுவனம், மீண்டு வர முயற்சித்து வரும் நிலையில், இது போன்று ஏற்படும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் மாஸ் விமானம் பற்றிய பயத்தையும், நம்பிக்கையின்மையையும் அதிகரித்து வருகின்றது.