Home வணிகம்/தொழில் நுட்பம் எண்ணெய் விலை வீழ்ச்சி புதிய வாய்ப்புகளை உருவாக்கும் – ஏர் ஏசியா தலைமை நிர்வாகி ஐரீன்...

எண்ணெய் விலை வீழ்ச்சி புதிய வாய்ப்புகளை உருவாக்கும் – ஏர் ஏசியா தலைமை நிர்வாகி ஐரீன் ஒமார்!

578
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 14 – எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் விமான நிறுவனங்களின் நிகர இலாபம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த விலை வீழ்ச்சி தங்கள் நிறுவனத்திற்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Aireen Omar Air Asia
ஏர் ஏசியா தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார்

ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஐரீன் ஒமார் இது தொடர்பாக கூறியதாவது:-

“தென்-கிழக்கு ஆசியாவில், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த விலை வீழ்ச்சி மூலம் எங்கள் நிறுவனத்தை மேம்படுத்திக் கொள்ளவும், வர்த்தகத்தை அதிகரிக்க புதிய பாதைகளை வகுக்கவும் பல்வேறு வாய்ப்புகள் உருவாகி உள்ளன.”

#TamilSchoolmychoice

“ஏறக்குறைய 50 சதவீதம் அளவிலான எண்ணெய் விலை வீழ்ச்சி ஏற்பட உள்ளது. இது வர்த்தகத்திற்கான நல்ல அறிகுறியாகும்.  இதன் மூலம் முன்பை விட மிகக் குறைந்த விலையில் எங்களால் விமான பயணத்தை எற்படுத்த முடியும்.”

“2014-ம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்ததாக இருந்தது. புதிய விமான நிலைய மாற்றம் எங்கள் நிறுவனத்திற்கு சற்றே அசெளகரியத்தை ஏற்படுத்தியது. எனினும், 2015 எங்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.