Home உலகம் 53 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

53 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

637
0
SHARE
Ad

??????????????சான்டியாகோ, பிப்ரவரி 10 – சிலி நாட்டின் ஆண்டஸ் மலைத் தொடர் அருகே சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1961-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி கிரீன் கிராஸ் கால்பந்து அணியினர் உட்பட 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவிற்கு சென்ற இந்த விமானம் திடீர் என மாயமானது. தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லாத அந்த கால கட்டத்தில் இந்த விமானத்தை கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில்,சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

??????????????

மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக் கிடந்துள்ளன. அதனை மலை ஏறும் குழுவினர் புகைப்படங்களாக எடுத்து சிலி நாட்டு தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி உள்ளனர்.

லேன் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற அந்த விமானத்தில் கிரீன் கிராஸ் கால்பந்து அணியை சேர்ந்த பயிற்சியாளர் அர்னல்டோ வேஸ்குவெஸ், எட்டு விளையாட்டு வீரர்கள், இதர அணி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் பயணம் செய்தனர். விமானம் காணாமல் போனதற்கு பின் சுமார் 50 ஆண்டுகள் பிறகு அது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.