Home இந்தியா நிலக்கரி வழக்கு: நீதிமன்ற சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு!

நிலக்கரி வழக்கு: நீதிமன்ற சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் மனு!

612
0
SHARE
Ad

manmohan-singh-editors-11புதுடெல்லி, மார்ச் 26 – நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு  ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில்  நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கத்தை ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக அப்போது நிலக்கரி துறையை  கவனித்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ தனி நீதிமன்றம் வழக்கு பதிவு  செய்யப்பட்டது.

இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மன்மோகன் சிங், குமாரமங்கலம் பிர்லா, உட்பட 6 பேர், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி  ஆஜராகும்படி சம்மன் அனுப்ப சிபிஐ நீதிபதி பரத் பரசர் உத்தரவிட்டார்.

மன்மோகன் சிங் மீது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படவில்லை.  நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டார், சதி திட்டம், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்மன் அனுப்பப்பட்டதும் அது  குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங், உண்மையிலேயே நான் நிலைகுலைந்துள்ளேன்.  இது எனது வாழ்வின் ஒரு பகுதி. நான் சட்டத்துக்கு உட்பட்டவன். நீதிமன்ற நடைமுறைகளை மதிக்கிறேன்.

இந்த வழக்கில் உண்மைகளை எடுத்துக் கூறி நான்  குற்றமற்றவன் என்பதை நிருபிப்பேன். வாய்மை வெல்லும் என்றார். மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு  தெரிவித்தது.

அரசியல் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் சிபிஐ தனி நீதிமன்றம்  அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.