Home இந்தியா ஐ.பி.எல்-8: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

ஐ.பி.எல்-8: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

410
0
SHARE
Ad

ipl1பெங்களூர், மே 14 – ஐ.பி.எல் சீசன் 8 தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச தீர்மானித்தது.

மழையால் ஆட்டம் துவங்குவது தாமதமானதையடுத்து 20 ஓவர்கள் கொண்ட போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை 106 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய பெங்களுரூ அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இது பஞ்சாப் அணியின் மூன்றவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.