Home நாடு பாஸ் தலைவர் பதவியைத் தக்க வைத்தார் ஹாடி!

பாஸ் தலைவர் பதவியைத் தக்க வைத்தார் ஹாடி!

592
0
SHARE
Ad

hadi awang 300-200கோல சிலாங்கூர், ஜூன் 4 – பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் நடப்புத் தலைவரான ஹாடி அவாங்.

கடந்த 50 ஆண்டுகளில், முதன் முதலாக தலைமைப் பதவிக்காக நடைபெற்ற போட்டியில், ஹாடி 928 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அகமட் அவாங் 233 வாக்குகளும் பெற்றனர்.

அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் சற்று முன்னர், கோல சிலாங்கூர் உள்விளையாட்டு அரங்கில் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் துணைத்தலைவர், உதவித்தலைவர் மற்றும் மத்திய செயலவைக்கான பதவிகளின் தேர்தல் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.