Home இந்தியா டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் முன்னேற்றமில்லை: அதிநவீனக் கப்பல் திரும்பியது!

டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் முன்னேற்றமில்லை: அதிநவீனக் கப்பல் திரும்பியது!

531
0
SHARE
Ad

43சென்னை,ஜூன்24- காணாமல் போன டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிநவீனக் கப்பல், இதுவரை எந்தத் தடயங்களும் கிடைக்காததால் திரும்பிச் சென்றுவிட்டது..

பல கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரமாகத் தேடியும், நீண்ட நாட்கள் ஆன பின்னும், கடற்பகுதியில் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், காக்கிநாடாவில் இருந்து ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்’ என்ற அதிநவீனக் கருவிகள் கொண்ட ‘ஒலிம்பிக் கேன்யான்’ என்ற கப்பல் வரவழைக்கப்பட்டுத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தக் கப்பல் கடலுக்கு அடியில் ஒளிப்படம் எடுத்தும், நுணுக்கமாக ஆராய்ந்தும் (ஸ்கேன் செய்தும்) தேடும் பணியில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்தது. ஆனால் இதில் எந்தத் தடயமும் கிடைக்காததுடன், முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இந்தக்கப்பல் நேற்று பணியை முடித்துக் கொண்டு மீண்டும் காக்கிநாடாவுக்குத் திரும்பி சென்றுவிட்டது.

#TamilSchoolmychoice

அடுத்தகட்டத் தேடுதல் பணி என்னவென்று, கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:–

“சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் மாயமான விமானம் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளதால், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான  ஐந்து இடங்களைத் தேர்வு செய்துள்ளோம்.

அந்த இடங்களில் தீவிரமாகத் தேடுவதற்காக, இந்தியக் கடலோரக் காவல் படைத் தலைமையிடத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் இந்தியக் கடலோரக் காவல் படையில் உள்ள அதிநவீன சக்தி கொண்ட கப்பல் வர உள்ளது. அதன் மூலம் தேடும் பணி தொடரும். அதுவரை இங்குள்ள கப்பல்கள் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபடும்” என்றார்.