Home Authors Posts by editor

editor

59026 POSTS 1 COMMENTS

2016-ல் இந்திய இணைய வர்த்தகத்தின் வருவாய் 15 பில்லியனைத் தாண்டும்: கூகுள்!

புதுடெல்லி, நவம்பர் 22 - இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இணைய வர்த்தகத்தின் வருவாயும் கடந்த வருடங்களைக் காட்டிலும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகின்றது. 2016-ல் இந்தியாவில் இணைய வர்த்தகத்தின் வருவாய்...

இனி ‘ஃபயர்பாக்ஸ்’-ன் முதல் பக்கம் கூகுள் அல்ல யாஹூ!

சான் பிரான்ஸிஸ்கோ, நவம்பர் 22 - 'யாஹூ' (Yahoo) நிறுவனம், 'ஃபயர்பாக்ஸ்' (Firefox) உலாவியின் தயாரிப்பு நிறுவனமான மொசில்லாவுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் ஃபயர்பாக்ஸ் உலாவியின் முதல் பக்கமாக இருந்த கூகுளுக்கு பதில் யாஹூ...

வட கொரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானம் – “அணு ஆயுத சோதனை நடத்துவோம்” வட கொரியா...

பியாங்யாங், நவம்பர் 22 - ஐ.நா.வில் வட கொரியாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நாடு மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தும் என்றும் மிரட்டல்...

அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்க ரஷ்யா புதிய திட்டம்! 

மாஸ்கோ, நவம்பர் 22 - அமெரிக்கா-ரஷ்யா இடையே நெடுங்காலமாகவே நல்லுறவு இருந்ததில்லை. தனித்த முறையில் இரு நாடுகளும் சம பலம் கொண்டிருப்பதால், ஒன்றை ஒன்று வீழ்ச்சி அடையச் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு...

“மோசமான நிலையில் அம்னோ: மாறுங்கள் அல்லது மாற்றப்படுவோம்” மொய்தீன் எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ. 22 -  அம்னோ மோசமான நிலையில் உள்ளது என்றும் கட்சியின் செயல்பாடு மாற வேண்டும் என்றும் அம்னோ துணைத் தலைவரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் கூறியுள்ளார். இல்லாவிடில் ஆட்சி மாற்றம்...

இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமாவிற்கு மோடி அழைப்பு!

வாஷிங்டன், நவம்பர் 22 - இந்தியாவில் ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும்  குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின்...

திறன்பேசிகளுக்கு புதிய காணொளி ஒளிபரப்புச் சேவை – சாம்சுங் அறிவிப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 22 - சாம்சுங் நிறுவனம் தனது திறன்பேசிகளுக்கு 'மில்க் வீடியோ' (Milk Video) எனும் புதிய இலவச காணொளி சேவையைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 'யூ-டியூப்' (Youtube), 'ஸ்போடிஃபை' (Spotify) உள்ளிட்ட...

இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல்! ராஜபக்சே 3வது முறையாகப் போட்டி!

கொழும்பு, நவம்பர் 22 - இலங்கை அதிபர் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 2005 மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று...

அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தில் அதிரடித் திருத்தம் – ஒபாமா அறிவிப்பு!

வாஷிங்டன், நவம்பர் 22 - அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்ட திருத்தத்தை அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அமெரிக்காவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி...

திருமண செய்திகள் எதிரொலி: புதிய படத்திலிருந்து திரிஷா நீக்கம்!

சென்னை, நவம்பர் 22 - நிச்சயதார்த்தம், திருமணம் என திரிஷாவைப் பற்றி தொடர்ந்து வந்த செய்திகள் காரணமாக, ஒரு புதிய படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக...