Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
உரையாடல்கள் பதிவு: நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்!- காவல் துறை
உரையாடல்கள் பதிவுகள் சம்பந்தமாக நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
எம்ஏசிசி: வெளியிடப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக அப்துல் அசிஸ் விசாரிக்கப்படுவார்!- காவல் துறை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள உரையாடல்கள் பதிவுகள் தொடர்பாக முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் விசாரணைக்காக காவல் துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கிளந்தான் அம்னோவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 32,962.87 ரிங்கிட் அரசாங்கத்திற்கு சொந்தமானது!
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கிளந்தான் அம்னோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொகை வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டு, இப்போது அது மலேசியா அரசுக்கு சொந்தமானது.
எம்ஏசிசி வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்கள் அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படும்!
லத்தீபா கோயா வெளிப்படுத்திய உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் யாரென்பதை, இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஏசிசி: அகமட் மஸ்லான், ஷாரிர் சாமாட் கைது!
பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிர் சாமாட் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது.
தமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்!
1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின் வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.
“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்
நஜிப் துன் ரசாக் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருப்பதில் தவறேதும் இல்லை என்றும் முன்பு நஜிப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததற்கும் இதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை என்றும் துன் மகாதீர் கூறினார்.
எம்ஏசிசியிடமிருந்து புகார் அறிக்கை பெறப்பட்டது, ஆயின், உரையாடல்கள் பதிவு கிடைக்கவில்லை!- காவல் துறை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து புகார் அறிக்கை பெறப்பட்டதாகவும், ஆயினும், உரையாடல்கள் பதிவுகள் கிடைக்கவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
“லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்
நஜிப் துன் ரசாக், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதற்கு ராம் கர்பால் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“எம்ஏசிசி நீதிமன்றமாக உருமாறிவிட்டதா?!”- நஜிப்
எம்ஏசிசி வெளியிட்ட ஒன்பது உரையாடல்கள் பதிவுகள் குறித்து 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பி உள்ளார்.